News August 19, 2025

மகளிர் உலக கோப்பை… இந்திய அணி அறிவிப்பு

image

இந்தியாவில் செப்டம்பர் மாதம் தொடங்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா(VC), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஜெமிமா ராட்ரிக்ஸ், ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ், கிராந்தி கெளட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யஷ்திகா பாட்டியா, ஸ்நே ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி உலக கோப்பை வெல்லுமா?

Similar News

News August 19, 2025

BREAKING: ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

2 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 3 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து TN அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையராக என்.ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல் தலைமையக சட்டம் – ஒழுங்கு உதவி IG-யாக முத்தரசியும், மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மைய SP-யாக அதிவீர பாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News August 19, 2025

டெலிகிராம் சீக்ரெட் Features.. Try பண்ணுங்க..

image

டெலிகிராம் படம் பார்க்குறதுக்கு மட்டுமில்ல, அதுல இருக்குற Bots மூலமா புக்ஸ் டவுன்லோடு பண்றதுல இருந்து Flight ticket கூட புக் பண்ணலாம். 1. HAXNO BOT: இந்த BOT-ல டெக் தகவல்கள தெரிஞ்சிக்கலாம். 2. AirTrackBot: இதுல விமான டிக்கெட்டுகள புக் பண்றது மட்டுமில்லாம, அதன் விலை குறையும் போது Alert-களையும் பெறலாம். 3. DropMail.me: இந்த Bot-ல ஒருமுறை மட்டும் பயன்படுத்துற Email ID-கள Generate பண்ணலாம்..

News August 19, 2025

கன்னியாகுமரியில் நாளை உள்ளூர் விடுமுறை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு நாளை (ஆக.20) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த நாளையொட்டி திருவட்டார், விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய வட்டங்களுக்கு விடுமுறை என கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில், செப். 13-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!