News April 8, 2024
அரசியலில் குதித்தவுடன் புது கார் வாங்கிய நடிகை

நடிகை கங்கனா ரணாவத், தனது புது பென்ஸ் காரில் மும்பையை வலம் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் இவர், தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது அரசியல் வருகை ஏற்கெனவே சலசலப்பை கிளப்பிய நிலையில், கட்சியில் இணைந்த கொஞ்ச நாள்களிலேயே ₹2.43 கோடி மதிப்புள்ள புது காரை வாங்கியுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News January 26, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

அதிமுக கூட்டணியில் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி புதிதாக இணைந்துள்ளது. சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்த இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் (தமிழக விவசாயிகள் சங்கம்) மாநிலத் தலைவர் வெட்டவலம் கே.மணிகண்டன், பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் EPS-யிடம் வழங்கினார்.
News January 26, 2026
ஆஃபர்களை அள்ளி வீசும் BSNL

ஜியோ, ஏர்டெல் போன்ற நெட்வொர்க்குகளில் ₹400 வரை செலவிட வேண்டியிருக்கும் பிளானை ₹251-க்கு BSNL வழங்குகிறது. 30 நாள்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில், 100 GB டேட்டா, தினமும் 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்ட சேவைகளை பெறலாம். மேலும், BiTV சேவையையும் வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஜன.31-ம் தேதியுடன் இந்த ஆஃபர் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே முந்துங்கள். SHARE IT.
News January 26, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

நாளை மறுநாள் (ஜன.28) மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி, கரூர் வட்டத்திற்கும் அன்றைய தினம் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு ஜன.28-ல் பள்ளி, கல்லூரிகள் இயங்காது.


