News August 19, 2025

தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்ககவச சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Similar News

News August 19, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட்.19 ) நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004 ), ராசிபுரம் – ஆனந்தகுமார் ( 9498106528), திருச்செங்கோடு – மகாலக்ஷ்மி ( 7708049200), வேலூர் – கெங்காதரன் (6380673283 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். SHARE IT

News August 19, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ₹5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அதன் பண்ணை கொள்முதல் விலை ₹5 ஆகவே தொடர்ந்து நீடிக்கிறது.

News August 19, 2025

நாமக்கல்லில் பூர்வஜன்ம பாவம் நீக்கும் கோயில்!

image

நாமக்கல்: கொக்கராயன்பேட்டையில் பிரம்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாக தோன்றியவர். பிரம்மதேவர் வழிபட்டதால், இறைவன் பிரம்ம லிங்கேஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்டார். இவரை தரிசித்து வழிபட்டால், முன்ஜன்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் மகிமையை உணர்ந்த முதலாம் ஆதித்த சோழன், கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

error: Content is protected !!