News August 19, 2025

கொரோனா பாதித்தவர்களுக்கு இதயநோய் ரிஸ்க்: ஆய்வு

image

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ரத்தநாளங்கள் முதுமையடையும் ஆபத்து அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் ஸ்ட்ரோக், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் ரிஸ்க் அதிகரிக்கிறது. 16 நாடுகளை சேர்ந்த 2390 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இயல்பான வயதைவிட ரத்தநாளங்கள் 5 ஆண்டுகள் முதுமையடைவது கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பு, ஆண்களை விட பெண்களிடமும் அதிகம் இருப்பது உறுதியாகியுள்ளது.

Similar News

News August 19, 2025

VIRAL: வெள்ளத்தின் நடுவே ஒரு ‘செல்பி’!

image

வரலாறு காணாத கன மழையால் மகாராஷ்டிராவின் மும்பை, புனே போன்ற நகரங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன. பல இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஒருவர் சாலையின் நடுவே நாற்காலி போட்டு அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகியுள்ளது. அனைத்திற்கும் அட்ஜஸ்ட் பண்ணி, என்ஜாய் பண்ற மனப்பான்மை இந்தியர்களிடம் அதிகரித்து விட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றார். நீங்க என்ன சொல்றீங்க?

News August 19, 2025

இன்று இரவுடன் ₹249 பிளானை ரத்து செய்யும் ஏர்டெல்!

image

முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், இன்று நள்ளிரவுடன் முக்கியமான ரீசார்ஜ் பிளானை ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹249 ரீசார்ஜ் செய்தால் 28 நாள்களுக்கு இலவச அழைப்புகளுடன் தினமும் 1GB இன்டர்நெட் சேவையை அந்நிறுவனம் வழங்கி வந்தது. இந்த பிளான் இன்று நள்ளிரவுடன் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த பிளானை ஜியோ நிறுவனம் நேற்று நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

News August 19, 2025

ரயிலில் அதிக லக்கேஜுடன் பயணம்.. இனி அபராதம் உண்டு!

image

விமான பயணங்களை போல் ரயில் பயணங்களில் <<17452208>>அதிக லக்கேஜ் கொண்டு சென்றால் கட்டணம்<<>> வசூலிக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதிகபட்சமாக பயணி ஒருவர் முதல் ஏசி வகுப்பில் 70 கிலோ, இரண்டாம் ஏசி வகுப்பில் 50 கிலோ, மூன்றாம் ஏசி/ ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ, பொது மற்றும் 2S-ல் 35 கிலோ வரை லக்கேஜ் எடுத்து செல்லலாம். இந்த எடை அளவுகளை விட அதிகமாக எடுத்துச் செல்லப்படும் லக்கேஜிற்கு அபராதம் வசூலிக்கப்படும்.

error: Content is protected !!