News August 19, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, இன்று (19.08.2025) ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பழைய பேருந்து நிலைய சாலை, சக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்.இந்த நிகழ்வில் துறை சார்ந்த அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர். அப்போது பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News August 19, 2025
ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஈரோட்டில் 37.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்
News August 19, 2025
ஈரோடு மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில் வேலை நாடுநரும், வேலை வழங்குநரும் இலவசமாக பங்கேற்கலாம். மேலதிக தகவலுக்கு 86754 12356, 94990 55942 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
News August 19, 2025
ஆக.25 ஈரோட்டில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் இராணுவ வீரர் தேர்ந்தெடுக்கும் முகம் ஈரோடு வஉசி மைதானத்தில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான முன் ஏற்பாடுகளை கர்னல் அன்சுல் வர்மா நேற்று பார்வையிட்டார். ஈரோடு, சேலம் போன்ற 11 மாவட்ட இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்