News August 19, 2025
அன்புமணிக்கு தேதி குறித்த ராமதாஸ்; மீண்டும் நோட்டீஸ்

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவர் கட்சியில் இருந்து இன்று நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதத்தின் வாயிலாகவோ அன்புமணி பதிலளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 12, 2026
டெல்லிக்கு செல்ல தயாராகும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, மார்ச் 15-ம் தேதி விஜய் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, வரும் 14-ம் தேதி மாலை தனி விமானம் மூலம் அவர் டெல்லி செல்ல உள்ளார். முன்னதாக கடந்த 10-ம் தேதியே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தேர்தல் பணிகளை சுட்டிக்காட்டி ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டிருந்தார். அதனால், ஆஜராகும் தேதியை சிபிஐ மாற்றியது குறிப்பிடத்தக்கது.
News March 12, 2026
பழிதீர்க்காமல் விடமாட்டோம்: ஈரான் கடும் எச்சரிக்கை

ஹார்மோஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். உச்ச தலைவராக பதவி ஏற்ற பின் அவர் வெளியிடும் முதல் அறிக்கை இதுதான். அதில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தொடந்து தாக்குதல் நடத்தப்படும் எனவும், பள்ளி குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
News March 12, 2026
சிலிண்டர் காலியாவதை இப்படி கண்டுபிடிங்க

TN-ல் வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாட்டு உள்ளதோ என்ற அச்சத்தில் பலரும் அவசர அவசரமாக கேஸ் புக் செய்கின்றனர். அதற்கு முன்பாக சிலிண்டரில், இன்னும் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை அறிய எளிய வழி உள்ளது. ஈரமான துணியை சிலிண்டரில் மேல் இருந்து கீழ் நோக்கி துடைக்கவும். இப்போது, ஈரம் காயாமல் உள்ள பகுதிவரை சிலிண்டருக்குள் கேஸ் இருப்பதாக அர்த்தம். எனவே, நாள்களை கணக்கிட்டு கேஸ் புக் செய்யுங்கள்.


