News August 19, 2025
௹.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி கியூ பிரான்ச் போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மச்சாதுபாலம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு ஒரு சரக்கு வாகனத்தில் இலங்கை கடத்துவதற்காக ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1500 கிலோ எடை கொண்ட 43 மூடைகளில் பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.
Similar News
News August 19, 2025
தூத்துக்குடி: கணவரை கண்டு இனி பயப்படாதீர்கள்

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தேனி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9578560948 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!
News August 19, 2025
தூத்துக்குடி – நாகை 312 கி.மீ நீள பசுமை பாதை

இன்று (19.8.2025) இந்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி-நாகை இடையே புதியதாக 312 கிலோ மீட்டர் நீளத்தில் பசுமை வழி நான்கு வழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை சமர்ப்பிக்க கடைசி தேதி 29 செப்டம்பர் என கூறப்பட்டு உள்ளது.
News August 19, 2025
தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு…

தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து தூத்துக்குடி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பல்வேறு உதவி தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 2025-26 கல்வி ஆண்டிற்கான கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆகஸ்ட்.15 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் https://umis.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்