News August 19, 2025
மாதம் ரூ.750 உதவித்தொகையுடன் இலவச பயிற்சி!

கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) பல்வேறு பிரிவுகளுக்கான இலவசப் பயிற்சிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். இதற்கு பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. மாதம் ₹750 உதவித்தொகை,விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், வழங்கப்படும்.விருப்பமுள்ள மாணவர்கள் <
Similar News
News March 3, 2026
கோவை தெற்கு தொகுதியில் இவரா?

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையின் மிக முக்கியத் தொகுதியாகக் கருதப்படும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியின் மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டு வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற தொகுதியாகும்.
News March 3, 2026
சூலூர் அருகே ஆண் சடலம்!

சூலூர் குளத்தின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 3, 2026
கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் திருத்தேர் விழாவை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை (மார்ச்.4) காலை 10 மணி முதல், இரவு 10 மணி வரை, பேரூரில் இருந்து செட்டிவீதி ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகிறது. மாற்றாக பேரூரில் இருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே திரும்பி, பேரூர் பைப்பாஸ் ரோடு அடைந்து உக்கடம் வந்து செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.


