News August 19, 2025
ஒருமனதாக தேர்வு செய்யலாம்: PM மோடி அழைப்பு

துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளுக்கு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு சி.பி.ஆர்-ஐ வேட்பாளராக மோடி முறைப்படி அறிமுகம் செய்தார். இந்நிலையில், தங்கள் வேட்பாளராக Ex SC நீதிபதி <<17451913>>சுதர்சன் ரெட்டியை<<>> I.N.D.I.A. கூட்டணி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 19, 2025
’96’ பட பாடலில் வரும் இடங்கள் எங்கே இருக்கிறது தெரியுமா?

’96’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘லைஃப் ஆஃப் ராம்’ வீடியோ பாடலை அனைவரும் பார்த்து ரசித்திருப்பீர்கள். இன்னும் சிலர் பாடலில் வரும் விஜய் சேதுபதியை போல நாமும் அந்த இடங்களுக்கு செல்லவேண்டும் என ஆசைப்பட்டிருக்கலாம். அப்பாடலில் வரும் இடங்கள் எங்கே இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள SWIPE செய்யுங்கள். இதில் எந்த இடங்களுக்கு நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை கமெண்ட்ல சொல்லுங்க..
News August 19, 2025
Sinquefield Cup: குகேஷை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

Sinquefield Cup செஸ் தொடரில், உலக சாம்பியன் குகேஷை முதல் சுற்றிலேயே கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வீழ்த்தி உள்ளார். இதன் மூலம், உலக தரவரிசை பட்டியலில், குகேஷை முந்தி பிரக்ஞானந்தா 3-வது இடத்தை பிடித்துள்ளார். 3 ஆண்டுகளில் பிரக்ஞானந்தா ஒரு கிளாசிக்கல் செஸ் போட்டியில் குகேஷை தோற்கடிப்பது இதுவே முதல்முறை. 8 ரவுண்டுகள் கொண்ட Sinquefield Cup தொடரில், பிரக்ஞானந்தாவுடன் 6 வீரர்கள் 3-வது இடத்தில் உள்ளனர்.
News August 19, 2025
₹399 கட்டணத்தில் ChatGPT Go

ஓபன் ஏஐ நிறுவனம் மாதம் ₹399 கட்டணத்தில் ChatGPT Go பிளானை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ChatGPT சந்தா மாதம் ₹1,999 ஆக இருப்பதால் பலரும் அதில் இணைய தயங்கிய நிலையில் இந்த மலிவான பிளான் அறிமுகமாகியுள்ளது. இதில் GPT 5, அதிக மெசேஜ் / இமேஜ் அப்லோட் மற்றும் மேம்பட்ட இமேஜ் ஜெனரேஷன், நீண்ட மெமரி, விரிவான ஆய்வுத்தகவல் அணுகல், Projects, tasks, custom GPTs உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.