News April 8, 2024
புறக்கணித்த சசிகலா… வேதனையில் தினகரன்!

TTV தினகரன், ஓபிஎஸ் போன்றோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய சசிகலா நடராஜனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதிக்கட்ட முயற்சியாக, தினகரனே நேரடியாக சசிகலாவிடம் பேசிப் பார்த்தாராம். ஏற்கெனவே அவருடன் மனக்கசப்பில் இருந்த மன்னார்குடி திவாகரன், இதுதான் சரியான நேரமென குறுக்கிட்டு பிரசாரத்துக்குச் செல்லக் கூடாது என்று சசிகலாவை தடுத்தாராம். இதனால், தினகரன் மன வேதனையில் உள்ளாராம்.
Similar News
News January 19, 2026
‘அமைதி வாரியத்தில்’ சேர இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு!

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் நிர்வாகம் மற்றும் மறுகட்டமைப்பை மேற்பார்வையிட அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது. தனித்தனியான 11 உறுப்பினர்களை கொண்ட காசா நிர்வாக வாரியத்தின் தலைவராக டிரம்ப் இருப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மறுபுறம், அமைதி வாரியத்தில் சேர டிரம்பிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
News January 19, 2026
சச்சின் சாதனையை முறியடித்த கோலி

அதிக இடங்களில் சதமடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 35 வெவ்வேறு மைதானங்களில் சதமடித்து, சச்சினின் சாதனையை (34) முறியடித்துள்ளார். ரோஹித்(26), பாண்டிங்(21) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். இதேபோல், நியூசிலாந்துக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். கோலிக்கு(10) அடுத்தபடியாக காலிஸ்(9), ஜோ ரூட்(9), சச்சின்(9) ஆகியோர் உள்ளனர்.
News January 19, 2026
கஞ்சாவால் திணறும் தமிழகம்: நயினார்

போதைக் கும்பல்களின் அட்டூழியத்தால் தமிழக மக்கள் நடமாடவே பயப்படுவதாக நயினார் சாடியுள்ளார். தனது X பதிவில், திருவள்ளூரில் போதைக் கும்பலின் தாக்குதலால் 2 இளைஞர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். DMK ஆட்சியில் போதை பேய் தலைவிரித்து ஆடுவதாகவும், போதைப் பொருள்கள் மயமான CM ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து TN தனது சுயத்தை மீட்டெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.


