News August 19, 2025
மீண்டும் தள்ளிப்போகும் ‘கைதி 2’?

லோகேஷ் கனகராஜை பெரிய டைரக்டராக மாற்றியது கைதி படம். கூலி படத்தை முடித்த கையுடன் அவர் ‘கைதி 2’ வேலையில் இறங்குவார் என கூறப்பட்ட நிலையில், அப்படம் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. லோகேஷ் அடுத்து ரஜினி- கமலை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இரண்டில் எந்த படத்தை லோகேஷ் முதலில் இயக்க வேண்டும்?
Similar News
News August 19, 2025
FLASH: கூடும் ‘கூலி’ கலெக்ஷன்.. U/A சான்று கேட்டு வழக்கு

‘கூலி’ படம் 5 நாள்களில் சுமார் ₹450 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என கூறி தணிக்கை வாரியம் A (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும்) சான்று வழங்கியது. இதனால், பலரும் குடும்பத்துடன் படம் பார்க்க முடியாமல் போனது. இந்நிலையில், U/A சான்று கேட்டு ஐகோர்ட்டில் படக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது. U/A சான்று கிடைத்தால் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News August 19, 2025
இனி ரயிலில் Luggage கொண்டு செல்ல கடும் விதிகள்!

ரயில் பயணத்தின் பெரும் சிக்கலே, மிகப்பெரிய Luggage முட்டைகள் தான். இதைத் தீர்க்க, இந்திய ரயில்வே, விமான பயணங்கள் போல Luggage எடை சரிபார்ப்பு பிறகே, பயணிகளை ரயிலில் அனுமதிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த முறை பிரயாக்ராஜ் டிவிஷனில் சோதனை செய்யப்படவுள்ள நிலையில், குறிப்பிட்ட எடைக்கு மேலே Luggage எடுத்து சென்றால், அபராதம் விதிக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. இது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
News August 19, 2025
தவெக மாநாடு.. சைலண்ட்டாக கலாய்த்த தமிழிசை

தவெக 2-வது மாநாடு ஆக.21-ல் நடைபெறவுள்ளது. இது பற்றி தங்கள் கருத்து என்ன என தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, து.ஜனாதிபதி விஷயத்தில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது எனவும், தவெகவே எப்போதாவது தான் அவர்களை பற்றி யோசிக்கிறார்கள். இதில் நாங்கள் யோசிக்க என்ன இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.