News August 19, 2025
திருவாரூர்: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry!

திருவாரூர் மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
Similar News
News March 4, 2026
திருவாரூர்: காரில் குட்கா பொருள்கள் கடத்திய இருவர் கைது!

நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். நகர் இருவழிச்சாலையில் வேகமாக வந்த காரை மடக்கி விசாரித்தனர். காரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் (28), குஜராத்தைச் சேர்ந்த சோமாபாய் (25) இருந்தனர். மேலும் காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 320 கிலோ இருந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.
News March 4, 2026
திருவாரூர்: மனைவியை எரித்த கணவர்!

சித்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்.28 இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனைவியின் உடலில் மன்னனை ஊற்றி ஐயப்பன் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ஜெயசித்ரா மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், பெருகவாழ்ந்தான் போலீசார் ஐயப்பனை கைது செய்துள்ளனர்.
News March 4, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.3) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


