News August 19, 2025

சேலம்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

சேலம் ஆக.20ஆம் தேதி நாளை புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்
♦️கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் ♦️கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் கோல்நாயக்கன்பட்டி ♦️நரசிங்கபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நரசிங்கபுரம் ♦️மல்லூர் அகர மஹால் மண்டபம் மல்லூர்
♦️ஓமலூர் எஸ் எஸ் ராஜா திருமண மண்டபம் பச்சனப்பட்டி
♦️மகுடஞ்சாவடி சோனா யோகா மருத்துவகல்லூரி கண்டர் குல மாணிக்கம்

Similar News

News August 19, 2025

BREAKING: சேலத்தில் ரேபிஸ் நோய் தாக்கி ஒருவர் பலி!

image

சேலம், கொங்கணாபுரம் அருகே இலவம்பாளையத்தை சேர்ந்த தறி தொழிலாளி குப்புசாமி (43) ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் வளர்ப்பு நாய் கடித்த நிலையில் சிகிச்சை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 3 நாளாக ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 புகார் அளிக்கலாம்.

News August 19, 2025

100 சதவிதம் மானியம் சேலம் கலெக்டர் அறிவிப்பு!

image

தோட்டக்கலைதுறை மூலம் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிதம் மானியம் ஒரு எக்டருக்கு ரூ.22,000 மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.18,000 மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகவும் என சேலம் கலெக்டர் பிருந்தா தேவி அறிவிப்பு.(SHARE பண்ணுங்க)

News August 19, 2025

சேலத்தில் அங்கீகரிக்கப்படாத 3 கட்சிகள் ஆஜராக உத்தரவு

image

இந்திய தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்திந்திய தொழிலாளர் கட்சி, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, மற்றும் திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!