News August 19, 2025
சிவாஜிக்கு பிறகு வடிவேலு தான் சிறந்த நடிகர்: வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு மிகப்பெரிய ஒரிஜினல் நடிகன் என்றால் அது வடிவேலு தான் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வடிவேலுவுக்கு படிப்பும், சினிமா பின்புலமும் கிடையாது, ஆனால் ஒவ்வொரு படத்திலும் கேரக்டராகவே வாழ்வார் என அவர் கூறியுள்ளார். மேலும், வடிவேலு வெறும் காமெடி நடிகர் கிடையாது, கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
ட்ரோன் பிசினஸில் களமிறங்கும் டிரம்ப் மகன்கள்

ஈரானுடன் போர் நடக்கும் சூழலில் டிரம்ப்பின் மகன்கள் எரிக் & டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ட்ரோன் பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ளனர். ஆட்டோனமஸ் டிரோன்கள் தயாரிக்கும் Powerus நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். போர் தீவிரமடைந்து டிரோன் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் இது நடந்துள்ளது. போர் நடைபெறும் நேரத்தில் டிரம்ப் மகன்கள் ஆயுத வியாபாரத்தில் நுழைந்துள்ளது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
News March 10, 2026
சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பு கொண்ட செடி!

சர்க்கரை சாப்பிட ஆசை இருந்தும், நீரிழிவு நோய் வந்துவிடும் என் பயமா? இச்செய்தி உங்களுக்கே! பேக்டரிகளில் தயாரிக்கப்படும் சர்க்கரைக்கு மாற்றாக சீனித்துளசி (Stevia) செடி உள்ளது. சர்க்கரையை விட 150- 300 மடங்கு இனிப்பு கொண்ட இதன் இலைகளில் கலோரிகளும் குறைவாம். பிரேசில், உருகுவே நாடுகளில் தோன்றிய இச்செடியை, சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட அளவிற்கு உட்கொள்ளலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
News March 10, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு… மக்களுக்கு அதிர்ச்சி

கடந்த தேர்தலில், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என்ற திமுகவின் வாக்குறுதி வரவேற்பை பெற்றது. இது திமுகவின் வெற்றிக்கும் உதவியது. இந்நிலையில், நேற்று திருச்சி திமுக மாநாட்டில், நகைக்கடன் தள்ளுபடி பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியாகாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


