News August 19, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

1. பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
2. இந்தியாவின் முதல் ரயில் பாதை எங்கு அமைக்கப்பட்டது?
3. ஆபரேஷன் Blue Star எந்த ஆண்டு நடந்தது?
4. இந்தியா சார்பில் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றவர் யார்?
5. திரை அரங்குகளே இல்லாத நாடுகள் எவை?
பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

Similar News

News August 19, 2025

கொரோனா பாதித்தவர்களுக்கு இதயநோய் ரிஸ்க்: ஆய்வு

image

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ரத்தநாளங்கள் முதுமையடையும் ஆபத்து அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் ஸ்ட்ரோக், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் ரிஸ்க் அதிகரிக்கிறது. 16 நாடுகளை சேர்ந்த 2390 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இயல்பான வயதைவிட ரத்தநாளங்கள் 5 ஆண்டுகள் முதுமையடைவது கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பு, ஆண்களை விட பெண்களிடமும் அதிகம் இருப்பது உறுதியாகியுள்ளது.

News August 19, 2025

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு

image

டெல்லியில் FM நிர்மலா சீதாராமனை, அமைச்சர் தங்கம் தென்னரசு, MP கனிமொழி சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நபார்டு நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்தனர். மேலும், நாளை முதல் 2 நாள்கள் நடைபெறவுள்ள GST கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பிலான முக்கிய கோரிக்கை மனுவையும் வழங்கியுள்ளனர். இந்த GST கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பில் மாற்றம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

News August 19, 2025

ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் புறக்கணிப்பா ? ரசிகர்கள் ஷாக்

image

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல்லில் ஷ்ரேயஸ் 604 ரன்கள், ராகுல் 539 ரன்கள் குவித்த பிறகும் அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும் இருவரும் இடம்பெறவில்லை. ரிசர்வ் வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!