News April 8, 2024
எல்.ஐ.சி ஏஜெண்ட் டூ மூத்த கோடீஸ்வரர்

இந்தியாவின் வயது முதிர்ந்த கோடீஸ்வரராக 93 வயதில் மறைந்த லக்ஷ்மன் தாஸ் மிட்டலை (₹24,070 கோடி சொத்து) ஃபோர்ப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆரம்ப காலக்கட்டத்தில் எல்.ஐ.சி ஏஜெண்டாக பணியாற்றிய அவர், தனது 60ஆவது வயதில் தன் சொந்த சேமிப்பை வைத்து சோனாலிகா என்ற டிராக்டர் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது, 5 நாடுகளில் தயாரிப்பு ஆலைகளையும், 120 நாடுகளில் விற்பனை சந்தையையும் அந்நிறுவனம் கொண்டுள்ளது.
Similar News
News August 29, 2025
BCCI-ன் புதிய இடைக்கால தலைவர் நியமனம்

BCCI இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. BCCI தலைவர் ரோஜர் பின்னியின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து, வரும் செப்டம்பரில் BCCI பொதுக்கூட்டம் மற்றும் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை சுக்லா தலைவராக செயல்படுவார் என கூறப்படுகிறது. கடந்த 2020 டிசம்பர் 18-ம் தேதி சுக்லா BCCI-யின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
News August 29, 2025
திமுக அரசை கடுமையாக சாடிய அண்ணாமலை

திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தனது X பதிவில் 2023 – 2024 கல்வியாண்டில் 42.23% ஆக இருந்த சேர்க்கை விகிதம் நடப்பு கல்வியாண்டில், 37.92% ஆக குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளை விட தனியாரில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளதாகவும், இந்த அரசு வெற்று விளம்பர அரசு என்றும் சாடியுள்ளார்.
News August 29, 2025
ChatGPT-ஐ விட ஸ்மார்ட்டான AI Tools.. Try பண்ணுங்க

ChatGPT-ஐ விட ஸ்மார்ட்டான பல AI Tools இருக்கிறது. 1.CHAT PDF- கடினமாக இருக்கும் PDF-ஐ இதில் அப்லோடு செய்தால், இந்த AI-யே அதனை விளக்கும். 2.Dectopus – உங்களுக்கு தேவையான PPT Presentation-ஐ இந்த AI உருவாக்கி கொடுக்கும். 3.Jenni AI – பெரிய பெரிய கட்டுரைகளை எழுதும் போது, அடுத்து என்ன எழுத வேண்டும் என்ற தடுமாறுகிறீர்களா? இந்த AI நீங்கள் என்ன எழுத வேண்டும் என்பதை சொல்லும். SHARE.