News August 19, 2025
ராம்நாடு: தேர்வு இல்லை! ரயில்வேயில் வேலை வாய்ப்பு!

ராமநாதபுரம் இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News August 19, 2025
ராம்நாடு: ரூ.750 உதவி தொகை.. FREE லேப்டாப்! உடனே APPLY

ராமநாதபுரம் மாவட்ட அரசு ITI நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 8 (அ) 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்/பெண் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 14 – 40 ஆகும். மாதம் ரூ.750 உதவித்தொகை, லேப்டாப் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பரமக்குடி 04564 231303, கடலாடி 9791428208, கமுதி 9486888176, திருஉத்திரகோசமங்கை 9791428208, முதுகுளத்தூர் 04576 222114 தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் பயன்பெற SHARE பண்ணுங்க
News August 18, 2025
ராமநாதபுரம்: காவல் துறை அவசர உதவி எண்கள்

இன்று (ஆகஸ்ட்.18) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News August 18, 2025
ராம்நாடு விவசாயிகளே உங்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் ஆக 22. காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம். இதில் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.