News August 19, 2025
தர்மபுரி : B.E படித்தவர்களுக்கு ஏர்போர்ட் வேலை!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 976 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பி.இ, பி.டெக், எம்.சி.ஏ மற்றும் கேட் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். ரூ.40,000 – ரூ.1,40,000 வரை சம்பளம். செப்.27ம் தேதி கடைசிநாள் <
Similar News
News August 19, 2025
தர்மபுரி: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News August 19, 2025
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,15,000 கன அடி தண்ணீர் வரத்து

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (19.08.2025) காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,15,000 கன அடியாக தண்ணீர் வரத்து கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று(ஆக.18) வரை 50,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று(ஆக.19) காலை நிலவரப்படி 78,000 கனஅடியாக அதிகரித்துள்ளது, அதனால் ஏற்கனவே பரிசல்கள் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் தடை , கரையோர பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.