News August 19, 2025
BREAKING: கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் அன்புமணி

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க, ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரம் தோட்டத்தில் சற்றுநேரத்தில் கூடுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணிக்கு, ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அவரது தரப்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், அவர் மீது நடவடிக்கை பாய உள்ளது.
Similar News
News August 19, 2025
சுதர்சன் ரெட்டியை தேர்ந்தெடுத்தது ஏன்?

INDIA கூட்டணியின் து.ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சட்டத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான இவர், கட்சி சார்பற்றவர். இவர் எந்த தேர்தலிலும் இதுவரை பங்கேற்றதில்லை. இவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்த கார்கே, ஒரு சிறந்த மனிதரை, நன்கு சட்டம் அறிந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
அன்புமணிக்கு தேதி குறித்த ராமதாஸ்; மீண்டும் நோட்டீஸ்

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவர் கட்சியில் இருந்து இன்று நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதத்தின் வாயிலாகவோ அன்புமணி பதிலளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
அமித்ஷா மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மையா?

நெல்லையின் தச்சநல்லூர் பகுதியில் ஆக.22-ம் தேதி அமித்ஷா தலைமையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அனுமதி அளிக்க முடியாது என நெல்லை மாநகர துணை ஆணையர் கூறியதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், காவல்துறை சார்பில் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான அனுமதி பரிசீலனையில் உள்ளது எனவும், பேனர் வைக்க மட்டுமே அனுமதி மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.