News April 8, 2024
வட இந்தியாவிலும் பாஜக மண்ணை கவ்வும்

வடக்கிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றிபெறும் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பாசிச போக்கை தமிழ்நாடு, கேரள மக்கள் இணைந்து முறியடிப்பார்கள். இரண்டு மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடையும் என்ற அவர், இந்த வெற்றி இந்தியா முழுவதும் பிரதிபலிக்கும் என்றார். மேலும் பேசிய அவர், கூட்டணிக்கு யார் தலைவர், யார் பிரதமர் போன்ற கேள்விகள் தற்போதைக்கு அவசியமில்லாதது என்றும் தெரிவித்தார்.
Similar News
News January 23, 2026
தஞ்சை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை!

தஞ்சை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ.20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ.18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <
News January 23, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று (ஜன.23) மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹450 அதிகரித்து ₹14,650-க்கும், சவரனுக்கு ₹3,600 அதிகரித்து ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவதால், வரும் நாள்களிலும் விலை உயரும் என கூறப்படுகிறது.
News January 23, 2026
திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் ரகசிய ரூல்ஸ் போட்டதா?

காங்கிரஸில் புதிதாக தேர்வாகியுள்ள மாவட்ட தலைவர்கள் திமுகவினரோடு பேசக்கூடாது என தலைமை உத்தரவிட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. பிப்.14-ல் ராகுல் தமிழகம் வரும்போதுதான் கூட்டணி இறுதியாகும். அதற்குள் திமுகவோடு இணக்கம் காட்டவேண்டாம் என்பதற்காகவே இப்படியொரு ரகசிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இருகட்சிகளுக்கு இடையே இருக்கும் புகைச்சல் மேலும் அதிகரித்திருப்பதாக பேசப்படுகிறது.


