News August 19, 2025
சென்னையில் உயிரை பறித்த இன்ஸ்டா ரீல்ஸ்

சென்னை பல்லாவரத்தில் KTM பைக்கை அதிவேகமாக ஓட்டி சென்றபோது, எதிரே வந்த ஸ்கூட்டியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுஹேல் அகமது (15) என்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். KTM பைக்கை இயக்கிய அப்துல் அகமது (17), ஸ்கூட்டியில் வந்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரீல்ஸ் எடுக்க பைக்கை அதிவேகமாக இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 11, 2026
மதுரவாயலில் பாலியல் சீண்டல்: வாலிபர் கைது!

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 41 வயது பெண், தனது மகன், மகளுடன் மார்ச் 8ம் தேதி மதுரவாயல் டேனியல் தாமஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்தபின், சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்றார். புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் சுராஜா பத்ரா (24), நேற்று கைது செய்தனர்.
News March 10, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னையில் இன்று (மார்ச்.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!


