News August 19, 2025
₹249 ப்ளானை நீக்கியது ஜியோ

குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் பேக் ஆக இருந்த ₹249 ப்ளானை ஜியோ நீக்கியது. 28 நாள்கள் செல்லுபடியாகும் இத்திட்டத்தில் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ், இலவச ஜியோ சினிமா உள்ளிட்ட பல சலுகைகள் இருந்தன. தற்போது இந்த குறைந்தபட்ச ப்ளானை ஜியோ நீக்கியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், ₹299 (1.5 GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச பேக் (₹50 கூடுதல்) ஆகியுள்ளது.
Similar News
News March 24, 2026
BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்

EX அமைச்சர் CV சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி, அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். தேர்தலில் சீட்டு விவகாரத்தில் CV சண்முகம் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தனது சாதியை சேர்ந்தவர்களுக்கே கட்சி பதவி வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தன்னை போலவே பலர், கட்சியில் இருந்து விலக இருப்பதாக பசுபதி கூறியுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 24, 2026
போனில் பேசுறப்போ ‘BG noise’ அதிகமா இருக்கா? சீக்ரெட் டிரிக்

சுத்தி பலர் இருக்கும் கூட்டமான இடங்களில் இருந்து நாம் ஒருவருக்கு போன் செய்தால், எதிர் முனையில் இருப்பவர்களுக்கு நாம் பேசுவதே சரியாக கேட்காது. இந்த இரைச்சலை தவிர்க்க, பல போன் கம்பெனிகள் ஒரு Hidden ஆப்ஷனை கொடுத்துள்ளனர். ➤Settings -> Sound & Vibrations ஆப்ஷனுக்கு செல்லவும். ➤Clear Voice or Clear Call option-ஐ On செய்தால் போதும். Background noise குறைந்துவிடும். அனைவருக்கும் SHARE THIS.
News March 24, 2026
எனக்கு இந்த குறைபாடு.. மனமுடைந்த நடிகை

குழந்தையாக இருந்தபோது தனக்கு சரளமாக பேசுவதில் குறைபாடு இருந்ததாகவும், அதற்காக பலமுறை Bully செய்யப்பட்டதாகவும் நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார். தனது தன்னம்பிக்கையை வளர்க்க பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறிய அவர், இப்போதும் தான் பேசும்போது யாராவது கேலி செய்தால் அது வலிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைப்பருவ காயங்கள் மனதில் நீண்டநாள் தங்கிவிடும் எனவும் அவர் பேசியுள்ளார்.


