News August 19, 2025
நாகை அருகே கொடூர கொலை

வேதாரண்யத்தை அடுத்த கோவில்தாவை சேர்ந்தவர் குமார் (38). இவருக்கும் கைலவணம்பேட்டை பகுதியை சேர்ந்த இமானுவேல் என்பவருக்கும் மணல் விற்பதில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில், இமானுவேல், வெங்கடாஜலபதி (55), கார்த்தி (31) ஆகியோர் இணைந்து குமாரை மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை செய்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News August 19, 2025
நாகை: 4 நாட்களுக்கு பயணிகள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்காலில் இருந்து நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் வரும் ஆகஸ்ட் 24, 25, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காரைக்கால் – திருவாருர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் இந்த ரயிலானது திருவாரூரில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News August 19, 2025
நாகை: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை (1/2)

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போது மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும், விருப்பமுள்ளவர்கள் <
News August 19, 2025
நாகை: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள் ஆகும். இதற்கு 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர விரும்புபவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!