News August 19, 2025
திருவாரூர்: விவசாய குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, அதனைத் தீர்ப்பது தொடர்பாக வரும் ஆக.21ஆம் தேதி மாலை 4 மணி அளவில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம், திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதாகத் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஷேர் பண்ணுங்க…
Similar News
News August 19, 2025
வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா முன்னிட்டு எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆக 27 , செப் 3 செப் 20 ஆகிய தேதிகளில் (06061) சிறப்பு ரயில் மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்திற்கு ஆக 28,செப் 4 ,, செப் 11ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (06062) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
திருவாரூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை (1/2)

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ.5000, இன்டெர்ன்ஷிப்பில் மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு நாளைக்குள் (ஆக.20) இங்கு <
News August 19, 2025
திருவாரூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள். 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர நல்ல வாய்ப்பு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.