News August 19, 2025

மனிதக்கழிவை யாரும் அகற்றக்கூடாது: வன்னியரசு

image

தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என அண்மையில் திருமா பேசியது சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கமளித்த வன்னியரசு, தூய்மைப் பணிக்கு குறிப்பிட்ட சமூகத்தினரே பணியமர்த்தப்படுகிறார்கள். ஆகையால் இதை யோசித்து, சமூகநீதிப்பார்வையில் திருமாவளவன் கருத்து தெரிவித்ததாக கூறினார். எதிர்காலத்தில் எந்த சமூகத்தினரும் மனிதக்கழிவை அகற்றும் பணியை செய்யக்கூடாது என்பதே விசிகவின் தொலைநோக்கு பார்வை என்றார்.

Similar News

News March 20, 2026

தமிழகத்தில் 5 முனைப் போட்டி

image

TN தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், புதிதாக அஇபுதமமுக – பாமக(ராமதாஸ்) கூட்டணி உருவாகியுள்ளது. NDA உடன் கூட்டணி இல்லை என விஜய் தெளிவுபடுத்தியதால் திமுக+, அதிமுக+, நாதக, தவெக என தேர்தல் களம் 4 முனைப் போட்டியாக இருந்தது. இன்று உருவாகியுள்ள புதிய கூட்டணியால் 2021-ஐ போல தேர்தல் களம் 5 முனைப் போட்டியாக மாறியுள்ளது. 2021-ல் அதிமுக+, திமுக+, நாதக, மநீம+, அமமுக+ ஆக இருந்தது.

News March 20, 2026

விஜய் மீண்டும் நடிக்கிறார்.. ஷூட்டிங் புறப்பட்டார்

image

தேர்தல் பணிகளுக்கு மத்தியில் விஜய் இன்று இரவு 7 மணிக்கு மும்பை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜன நாயகன்’ படத்தின் மறுதணிக்கையின் போது சில காட்சிகளை நீக்க சென்சார் போர்டு அறிவுறுத்தியதால், கதையில் சில மாற்றம் செய்து புதிய காட்சிகளை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனால் புதிய காட்சிகளில் நடிக்கவும், போஸ்ட் புரொடக்‌ஷென் பணிகளை முடித்து கொடுக்கவும் அவர் மும்பைக்கு பறந்துள்ளார்.

News March 20, 2026

கோடையில் வெயிலுக்கு பதில் மழை.. திடீர் மாற்றம்

image

கோடை தொடங்கும் நேரத்தில் இந்தியா முழுவதும் அரிதான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. திடீர் மழை, இடி, ஆலங்கட்டி மழை, பலத்த காற்று, பனிப்பொழிவு என இந்த தலைகீழ் மாற்றத்துக்கு மேற்கு காற்றின் இடையூறு (Western Disturbance) தான் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் மாற்றம் ஆப்கன் முதல் தென்னிந்தியா வரை 1000 கிமீ தொலைவுக்கும் அதிகமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!