News August 19, 2025
திருப்பத்தூர்: மோட்டார் சைக்கிள் விபத்தில் கால் முறிவு

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் பொன்னேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி கூட்டு ரோட்டில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது மோதியதில் ஐயப்பன் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரித்து வருகின்றது.
Similar News
News August 24, 2025
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு படையெடுக்கும் மக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பொதுமக்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். அருவியில் குளிப்பதற்கு நபர் ஒருவருக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
News August 24, 2025
திருப்பத்தூர் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

திருப்பத்தூர் மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்குகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 4 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 2 நாடாளுமன்ற தொகுதிகள்
▶️ 4 நகராட்சி
▶️ 3 பேரூராட்சிகள்
▶️ 2 கோட்டங்கள்
▶️ 4 வட்டங்கள்
▶️ 195 வருவாய் கிராமங்கள்
▶️ 208 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 6 ஊராட்சி ஒன்றியங்கள்
ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
News August 23, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 23) இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலீசார் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.