News April 8, 2024
விழுப்புரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு

விழுப்புரம் மாவட்டம் தெளி கிராமத்தில் அடிக்கடி மின்னழுத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. அதுபோக மாலை 4 மணிக்கு துண்டிக்கப்படும் மின்சாரம் இரவு 9 மணிக்குதான் வருகிறது. அடிக்கடி இதுபோல நடப்பதால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படிக்கின்ற மாணவர்கள் மிகவும் பாதிப்பை சந்திக்கின்றனர். குழந்தைகளும், பெரியவர்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
Similar News
News March 12, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.11) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கொடி அணிவகுப்பு பேரணி

விழுப்புரம் மாவட்ட காவல்துறை 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. வருகின்ற சட்டமன்றத்தேர்தல் – 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும்,
பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும்
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி,
கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
News March 11, 2026
விழுப்புரத்தில் கேட்ட வரம் தரும் அற்புத கோவில்!

விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமண வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவித்தால் திருமணத்தடை நீங்கும். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க


