News August 19, 2025
அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர் மின்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.19) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அரியலூர் கோட்ட மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையுமாறு செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 24, 2025
அரியலூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. 1 குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் சமூக நல அலுவலத்தை அணுகவும். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
அரியலூர்: செய்வினை எடுப்பதாக ரூ.12 லட்சம் மோசடி

வாலாஜா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (38). கடந்த 2022-ம் ஆண்டு இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், விஜயகுமார் மீது செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதையடுத்து புகாரின் பேரில் தர்மராஜ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனை விசாரித்த இவ்வழக்கை விசாரித்த அரியலூர் நீதிமன்றம் தர்மராஜுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
News August 24, 2025
அரியலூர் மாவட்ட போலீஸ் கடும் எச்சரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி அமைந்துள்ள பகுதியை சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்குள் பான் மசாலா குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.