News April 8, 2024
மாந்திரீக ஏவல் பாதிப்பில் இருந்து காக்கும் சூலினி

சப்த துர்க்கைகளில் ஈசனின் சூல அம்சமாக திகழும் சூலினி துர்க்கைக்கு உரிய பஞ்சமி திதியில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் மகிஷாசுரமர்த்தினி படத்திற்கு செவ்வரளி மாலை சாற்றி, 7 தீபங்களை வடக்கு திசையை நோக்கி ஏற்றி வைத்து, மிளகு வடை படைத்து, ஸ்ரீ சூலினி சக்ர விருத்த மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட்டால், பில்லி சூனிய மாந்திரீக ஏவல்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
Similar News
News March 16, 2026
தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக பலரும் கச்சா எண்ணெயில் முதலீடு செய்து வருவதால் <<19395246>>தங்கம் விலை சரிவை<<>> சந்தித்து வருகிறது. இந்நிலையில், நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, நடுத்தர மக்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளார். உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தங்கம் விலை 30% (சவரனுக்கு ₹35,000 வரை) சரியும் என தெரிவித்துள்ளார். SHARE IT
News March 16, 2026
தவெகவுக்கு ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை

ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு மன வலிமை இல்லை என்று பேசியதற்காக ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் கூறினர். தவறும் பட்சத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள ரஜினி ரசிகர்களும் தவெகவிற்கு எதிராக பூத் அளவில் போர்க்கொடி தூக்குவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News March 16, 2026
ஆஸ்கர் விருது வென்ற இந்திய வம்சாவளி இயக்குநர்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரே சிங் தற்போது உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது மனைவி Natalie Musteata உடன் இணைந்து இவர் இயக்கிய ‘Two People Exchanging Saliva’ என்ற பிரெஞ்சு குறும்படம் Best Live Action Short Film பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பிரான்ஸின் போர்டோ நகரில் பிறந்த இவர், The Appointment (2019), Plan large (2016) போன்ற குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.


