News August 19, 2025
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. மழை வெளுக்கும்: IMD

வங்க கடலில் நாளை(ஆக.19) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் சென்னை, காஞ்சி, செங்கை, தி.மலை, விழுப்புரம், வேலூர், தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD குறிப்பிட்டுள்ளது. கவனமா இருங்க மக்களே!
Similar News
News August 23, 2025
விஜய்யை பூமர் என கலாய்த்த அண்ணாமலை

‘அங்கிள்’ என ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் பேசியிருப்பது சரியில்லை என்றும், விஜய்யை ‘பூமர்’ மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவரது மனது கஷ்டப்படாதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியை வெற்றிப் பெற செய்து, EPS-யை CM ஆக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
News August 23, 2025
என்னிடம் கற்றதை விஜய் சொல்கிறார்: சீமான்

TVK மாநாட்டில் விஜய் விதை நெல் கதை கூறினார். இக்கதையை சீமான் 2021 தேர்தலின் போது தெரிவித்ததாகவும், <<17483040>>அதனை விஜய் காப்பியடித்தாகவும் விமர்சனங்கள் எழுந்தன.<<>> இதுபற்றி பேட்டியளித்த சீமான், கதையாக இருந்தாலும், முதலில் கூறியது நான் என்றும், இளவரசன் கதையாக தான் கூறியதை, தளபதி கதையாக விஜய் சொல்லிவுள்ளதாகவும் தெரிவித்தார். அண்ணனிடம் கற்றதை தம்பி சொல்கிறார். நானும் எங்கேயே கற்றதுதானே, அதில் தவறில்லை என்றார்.
News August 23, 2025
காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீண்ட நேரம் இரவில் உணவு இல்லாமல் இருந்த உடல், காலை உணவின் மூலம் புதிய சக்தி பெறுகிறது. ஆதலால் தான் காலை உணவு முக்கியமென மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமான காலை உணவு உடலுக்கு தேவையான புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஆகிய சத்துக்களை வழங்குகிறது. அதே சமயம் தேவையற்ற காலை உணவும் உடலை கெடுக்கிறது. அவை என்னென்ன என்பதை மேலே கொடுத்துள்ளோம். அதனை Swipe செய்து பார்க்கவும்.