News August 19, 2025
8 காவல் அலுவலர்கள் பணியிட மாற்றம்

திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் 8 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் காமினி இன்று மாலை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பாலக்கரை, அரியமங்கலம், தில்லைநகர், அரசு மருத்துவமனை காவல் நிலையங்களில் பணியாற்றும் எஸ்எஸ்ஐ கள் பேட்ரோல் எனப்படும் ரோந்து பணிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News March 11, 2026
திருச்சி: திமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் இலக்கு – EPS

திருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய EPS,“தேர்தல் வந்து விட்டால் திமுகவிடம் இருந்து அறிவிப்பு வெளியாவது வழக்கம். நாட்டு மக்கள் திமுகவை நம்ப போவதில்லை. திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கை ஒன்றா?. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அனைத்தும் திமுகவின் அடிமைகளாக உள்ளன. திமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் இலக்கு, ஸ்டாலின் குடும்ப ஆட்சிக்கு இது இறுதி தேர்தல்” எனக் கூறினார்.
News March 11, 2026
திருச்சி: பொதுக்கூட்டத்தில் பங்கேற்காத தமிழிசை, பொன்னார்

பஞ்சப்பூரில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. தமிழக பாஜக முன்னாள், இந்நாள் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றிருக்க பாஜகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் பங்கேற்காததும், அவர்களது பெயர்கள் மேடையில் அமர்வோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News March 11, 2026
மது விற்கப்படவில்லை திணிக்கப்படுகிறது- அன்புமணி குற்றச்சாட்டு

திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “இந்தியாவிலேயே அதிக கொலைகள் நிகழ்ந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மது விற்கப்படவில்லை திணிக்கப்படுகிறது. மத்தியிலும் நம்ம ஆட்சி, தமிழகத்திலும் நம்ம ஆட்சி. மண், மலையைத் தொடர்ந்து கிட்னியையும் கொள்ளை அடித்துள்ளனர். எனவே இந்த ஆட்சியை அகற்ற எங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள்” எனக் கூறியுள்ளார்.


