News April 8, 2024
வேலூர்: ரூ.56 லட்சத்தை திரும்ப ஒப்படைத்த அதிகாரிகள்

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி மாலை முதல் நேற்று வரை பறக்கும்படை குழுவினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் மொத்தம் ரூ. 71,87,150 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களுக்கான உரிய ஆவணங்களை காண்பித்து இதுவரை ரூ.56,24,530 ரொக்கப்பணம் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 5, 2025
வேலூரில் வீடு வீடாக படிவங்களை வழங்கிய கலெக்டர்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (நவ.4) பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய கானாறு தெருவில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளுக்காக படிவங்கள் வழங்கும் பணியை பார்வையிட்டு, படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கினார். இதில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
News November 5, 2025
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த பிரேமலதா வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதிவு உயர்வு பெற்றுள்ளார். அதேபோல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த தயாளன் மதுரை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் 37 கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News November 5, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.*


