News August 18, 2025
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? திருச்சி சிவா பதில்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுகவின் திருச்சி சிவாவை களமிறக்க ‘INDIA’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை யாரும் பரிசீலனையில் இல்லை என INDIA கூட்டணி தரப்பு கூறியது. டெல்லியில், வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தையும் INDIA கூட்டணி கூட்டியுள்ளது. இதனிடையே, வேட்பாளர் தேர்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
புதுச்சேரி: மகளிர் தின விழா – முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறி சமூக முன்னேற்றத்தில், மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது அரசின் நோக்கமாகும். இந்த மகளிர் தினத்தில், பெண்கள் அனைவரும் பூரண நலத்துடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், சமூகத்தில் சமத்துவமும் சமவாய்ப்பும் பெற்று, அனைத்துத் துறைகளிலும் மேன்மேலும் முன்னேறி சாதனை படைக்க வேண்டும் என்றார்.
News March 7, 2026
ஜன நாயகன் படம்.. வெளியானது UPDATE

சென்சார் பிரச்னையில் சிக்கிய ‘ஜன நாயகன்’ படத்தின் நிலவரம் என்னவானது என்றே தெரியாமல் இருந்தது. இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை மறுநாள் (மார்ச் 9) மதியம் 2 மணிக்கு படத்தை பார்க்கவுள்ளதாம். இதனையடுத்து, 20 நாள்களில் படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்பட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணி தொடங்கும். விஜய் ரசிகர்களே, ரெடியா!
News March 7, 2026
கேப்டன் சூர்யகுமார் ஓய்வு பெறுகிறாரா?

இந்திய T20 அணியின் கேப்டன் சூர்யகுமார் நாளை தனது ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான T20 WC இறுதிப் போட்டிக்கு பின், அவர் அனைத்து வடிவங்களிலிருந்தும் விடைபெறுவார் என்று கூறப்படுகிறது. வயது & ஃபார்ம் பிரச்னை காரணமாக ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. உலகக்கோப்பையை வென்ற பிறகு ரோஹித், கோலி ஓய்வை அறிவித்தது போல சூர்யகுமாரும் திட்டமிட்டுள்ளாரா?


