News April 8, 2024
இளம்பெண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பியவர் மீது வழக்கு

நாகமலைபுதுக்கோட்டை அருகே துவரிமான் பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது 21) என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு தான் காதலிப்பதாக செல்போனில் குறுந்தகவல் அனுப்பினார். இதை அந்த பெண்ணின் தந்தை தட்டி கேட்டுள்ளார். அப்போது சதீஷ் அந்த பெண்ணை திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று பெண்ணின் தந்தை அளித்த புகாரில் சதீஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News January 31, 2026
மதுரை அருகே கார் மோதி டூவீலரில் சென்ற வாலிபர் பலி

மேலூர் அருகே பெரிய சூரக்குண்டை சேர்ந்தவர் மூர்த்தி மகன் ரமேஷ்(23). இவர் மேலூர் திருப்பத்தூர் ரோட்டில் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது, ஒய். கொடிக்குளம் கணேசன் ஓட்டி வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் பலமாக அடிபட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 31, 2026
மதுரை – பிப்ரவரி 1 அன்று டாஸ்மாக் கடைகள் அடைப்பு

வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் பிப்1 மூடப்பட்டிருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபானக் கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகளும் மூடப்படும்
News January 31, 2026
மதுரையில் சோகம்… ஸ்டவ் பற்ற வைத்த போது பெண் கருகி பலி.!

மதுரை தங்கம் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி புவனேஸ்வரி( 27).
நேற்று சமையலறையில் ஸ்டவ் பற்ற வைத்த போது புவனேஸ்வரி சேலையில் தீ பற்றியது . தீயை கணவர் அணைக்க முயல, அவரும் தீக்காயம் அடைந்தார். இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி உயிரிழந்தார். வினோத் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெப்பக்குளம் போலீசார் விசாரணை.


