News August 18, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவுரை

குற்றத் தடுப்பு மற்றும் குற்றங்களை கண்டறிவதில் உதவியாக இருக்கும் சிசிடிவி கேமராக்களை நிறுவுமாறு சேலம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வீடுகள், கடைகள், போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது பாதுகாப்பை அதிகரிப்பதோடு, சந்தேக நபர்களை அடையாளம் காணவும் உதவுகிறது. அனைவரும் ஒத்துழைத்து கேமரா பொருத்தி, சமூகத்தின் பாதுகாப்பில் பங்கு கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News March 12, 2026
சேலம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
சேலம்: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
JUST IN: சேலத்தில் ஒரே இரவில் 7 வீடுகளில் கொள்ளை

வீரகனூர் அருகே உள்ள லத்துவாடி கிராமத்தில், சதீஷ்குமார் என்பவரது வீட்டில் 7 பவுன் நகை மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடு போனது. இதேபோல் பச்சையம்மாள், முருகன் உள்ளிட்ட மொத்தம் 7 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


