News August 18, 2025
காவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: தர்மபுரி மக்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகாவில் காவிரி ஆற்று படுகையில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தர்மபுரி மாவட்ட நிர்வாகம், காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News August 18, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக M. ரவிச்சந்திரன்
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி லதா, அரூர் ஜெய் கீர்த்தி, பென்னாகரம் செல்வமணி மற்றும் பாலக்கோடு வெங்கட்ராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 18, 2025
நாளை தருமபுரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாம் தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபம், அரூர் பொன் கற்பகம் திருமண மண்டபம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் கூத்தப்பாடி பெரியார் திருமண மண்டபம், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஜக்கம்பட்டி மற்றும் பாலக்கோடு சமுதாய கூடம் பாடி ஆகிய இடங்களில் நடைபெறும்.
News August 18, 2025
ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்த கலெக்டர்

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5-வது நாளாக வினாடிக்கு 6,500 கனஅடியாக நீடிப்பதால், மாவட்ட ஆட்சியர் சதிஸ், நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு மட்டும் தடை விதித்துள்ளார். கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.