News August 18, 2025

குழந்தை திருமணத்தை ஆதரித்தால் சிறை

image

பெண் குழந்தைகளுக்கு 18 வயதும், ஆண் குழந்தைகளுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் திருமணம் செய்து வைப்பதும், ஆதரிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர இயலாது. குழந்தை திருமணத்தை நடத்தி வைத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் 1098 அல்லது 181 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.

Similar News

News August 19, 2025

சதுரகிரி கோயிலில் ரூ.38 லட்சம், 35 கிராம் தங்கம் வசூல்

image

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. இதில் 21 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். காணிக்கை எண்ணும் பணி 3 நாட்கள் நடைபெற்றது. சந்தன மகாலிங்க கோயிலில் ரூ.3,80,336 பணமும், சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.34,19,850 பணமும், 35 கிராம் 430 மில்லி தங்கமும்,120 கிராம் 330 மில்லி கிராம் வெள்ளியும் கிடைத்தது.

News August 18, 2025

விருதுநகர்: ரூ.1,69,025 ஊதியத்தில் வேலை

image

விருதுநகர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவ்பர்கள்<> இங்கே கிளிக் செய்து <<>>கூடுதல் விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 18, 2025

BREAKING விருதுநகர்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

image

பாரப்பத்தியில் தவெக மாநாடு நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை – மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும். விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை செல்லும் பொதுமக்கள் வாகனங்கள் ராம்நாடு ரிங்ரோட்டில் இருந்து திருப்பவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்லலாம்.

error: Content is protected !!