News August 18, 2025
இந்திய ரயில்வேயின் ஹைடெக் ஐடியா..!

பசுமை ரயில் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தண்டவாளங்களுக்கு இடையே சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பணிகள், வாரணாசியில் உள்ள பனாரஸில் தொடங்கியுள்ளது. அங்கு, 28 பேனல்கள் அமைத்து 15KWp மின்சாரம் தயாரித்து ரயில் இன்ஜின் இயக்கப்பட்டதாக X தளத்தில் ரயில்வே பதிவிட்டுள்ளது. நல்ல முயற்சி என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 18, 2025
Chips பாக்கெட்டில் காற்று… இது தான் காரணமாம்!

சிப்ஸ் பாக்கெட்டில் காற்று நிரப்புவது ஏன் தெரியுமா? உடையாமல், நொறுங்காமல், சிப்ஸ் அப்படியே கஸ்டமர் கைக்கு போகவே இந்த ஏற்பாடு. பாக்கெட்டில் அதிக சிப்ஸ் இருந்தால், நொறுங்கி விடும். இதை தவிர்க்கவே நைட்ரஜன் கேஸ் நிரப்புகிறார்கள். ஏன், ஆக்சிஜன் நிரப்பலாமே என்கிறீர்களா? ஆக்சிஜன் எளிதில் வினை புரியக் கூடியது. அதனால் சிப்ஸ் நமத்துப் போகவும், கெட்டுப் போகவும் செய்யலாம். புரிகிறதா? SHARE IT.
News August 18, 2025
இதய நோயை 12 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம்

இதய நோய் வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே, அதன் அறிகுறிகள் தென்பட தொடங்கும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன் தெரிவித்துள்ளது. 5 கிமீ வேகத்தில் நடந்தாலே சிரமப்படுதல், சின்ன வேலைகள் செய்தாலே விரைவாக சோர்வடைதல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், அலட்சியப்படுத்த வேண்டாம். உடனே டாக்டரை அணுகவும். மேலும், வேக நடை, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
News August 18, 2025
அதிமுகவின் சிக்கலுக்கு தீர்வு காண உள்ளேன்: சசிகலா

பலவீனமாக உள்ள அதிமுகவை பலமாக மாற்றும் பணியை மேற்கொள்ள உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் பேசிய அவர், அதிமுகவில் உள்ள சிக்கலை அனுபவப்பட்டவர்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்றார். இதனால், மீண்டும் அதிமுகவை கைப்பற்ற சசிகலா முனைப்பு காட்டுவதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?