News August 18, 2025
நாகை மக்களே.. சொத்து வாங்கும் போது இதை மறக்காதிங்க!

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க. SHARE பண்ணுங்க.
Similar News
News August 18, 2025
நாகை: அனைத்தும் அருளும் நவநீதேஸ்வரர்

நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவநீதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நவநீதேஸ்வரரை வழிபட்டால், பணம் கஸ்டம், குடுமப சிக்கல், திருமண தடங்கல், தீராத நோய் என வாழ்வில் உள்ள சகல கஸ்டங்களும் நீங்கி, நினைத்து கைக்கூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News August 18, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய ஆட்சியர்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, மாவட்ட ஆசிரியர் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணன், தனி துணை ஆட்சியர் பரிமளாதேவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
News August 18, 2025
சிறப்பு ரயில்களுக்கு நாளை முதல் முன்பதிவு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஆக.19) காலை 8 மணிக்கு தொடங்கும் என தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.