News August 18, 2025
மயிலாடுதுறை: சொத்து வாங்கும் போது இத CHECK பண்ணுங்க!

✅வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
✅தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
✅சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
✅கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
✅வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க… SHARE பண்ணுங்க..
Similar News
News August 19, 2025
பொருள் இல்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அத்யாவசிய பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், பொருட்கள் பெற விருப்பம் இல்லையெனில் தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைதளமான www.tnpds.gov.in மூலமாக பொருள் இல்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.
News August 19, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேதிகள் அறிவிப்பு

மயிலாடுதுறையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த ஜூலை முதல் கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தற்போது மயிலாடுதுறையில் இரண்டாம் கட்ட முகாம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆகஸ்டு 21, 22 மற்றும் செப்டம்பர் 6, 10, 11 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 19, 2025
ஐஓபி வங்கி சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள்

மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் உள்ள ஐஓபி வங்கி, ரூரல் செல்ஃப் எம்பிளாய்மென்ட் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் உடன் இணைந்து, தையல், அழகுக்கலை, ஓட்டுநர் பயிற்சி மற்றும் கைபேசி சரிபார்த்தல் போன்ற பல இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. மதிய உணவுடன் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை, ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வகுப்புகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மயிலாடுதுறை ஐஓபி வங்கியைத் தொடர்புகொள்ளலாம்.