News August 18, 2025
ஈரோடு: FREE இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

ஈரோடு மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <
Similar News
News August 18, 2025
BREAKING: ஈரோடு அருகே பெண் வெட்டி படுகொலை

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட வர்ணபுரம் 4வது வீதி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி விஜயா வயது 38 என்பவர். இன்று மதியம் சுமார் 3 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டில் உள்ளே நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி விட்டார். இந்த சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News August 18, 2025
பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை விரைவில் எட்ட உள்ளதால் மூன்றாவது முறையாக இன்று வினாடிக்கு 5000 முதல் 10000 கன அடி வரை உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதனால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க கேட்டுக் கொண்டுள்ளனர்
News August 18, 2025
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்!

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இன்று (18.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உட்பட பலர் உள்ளனர்.