News August 18, 2025
மேட்டுர் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

சேலம் மாவட்டம், மேட்டுர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு, பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கரையோரம் இருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக வெளியேறினர்.
Similar News
News August 18, 2025
3 கட்சிகள் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு

சேலம் அனைத்திந்திய தொழிலாளர் கட்சி, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, திரிணாமூல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆகிய அங்கீகாரம் இல்லாத 3 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக, உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ தலைமை தேர்தல் அலுவலர், தலைமைச் செயலகம், சென்னை 600009 என்ற முகவரியில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி செஞ்சிலுவை சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் தங்களது ஆதார் அட்டை, அடையாள அட்டை, பதிவு செய்யப்பட்ட ஆயுட்கால உறுப்பினர் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
News August 18, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று (ஆகஸ்ட் 18) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டது.