News April 8, 2024
IPL: வெற்றிப் பாதைக்கு திரும்புமா CSK?

சென்னை – கொல்கத்தா இடையேயான 22ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்ற சென்னை அணி, அடுத்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். தோல்வியே பெறாத கொல்கத்தா உடன் மோதுவதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
Similar News
News March 17, 2026
பெட்ரோல், டீசல்.. சற்றுமுன் அறிவிப்பு வெளியானது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் திட்டம் இல்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பெட்ரோலிய துறை துணை செயலாளர் சுஜாதா, பெட்ரோல், டீசல் இருப்பு போதுமான அளவு இருப்பதால் மக்கள் பீதியில் அதிகளவு வாங்கி சேமிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். மேலும், அனைத்து வணிக LPG நுகர்வோரும் PNG-க்கு மாற வேண்டும் என்றார்.
News March 17, 2026
CINEMA 360: மீண்டும் தளபதி காம்போ!

*சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘ரஜினி 173’ படத்தில் ஷோபனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறதாம் *H.வினோத்- சூர்யா காம்போவில் விரைவில் ஒரு படம் உருவாகவுள்ளதாம் *மணிரத்னம் இயக்கும் புதிய படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கலாம் என கூறப்படுகிறது *‘அரசன்’ படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம் *பைனான்ஸ் பிரச்னையால், ரவி மோகன் – SJ சூர்யா நடிக்கும் படம் கைவிடப்படலாம் என கூறப்படுகிறது.
News March 17, 2026
பாஜக கேட்டது 35.. அதிமுக கொடுக்க முன்வருவது 27!

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. 35 தொகுதிகள் வழங்குமாறு பாஜக கோரியிருந்த நிலையில், 27 தொகுதிகளை வழங்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை வரும் 20-ம் தேதி இறுதி செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாம். கடந்த முறை அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் பாஜக போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.


