News August 18, 2025

டெல்லியில் PM மோடி – சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

image

NDA-வில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், PM மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்களை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள PM மோடி, நீண்ட ஆண்டுகால பொது சேவை மற்றும் அனுபவங்களை கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 4, 2026

விஜய் நிகழ்ச்சியில் விபத்து.. ஒருவர் கவலைக்கிடம்

image

தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜய் சென்றபோது, அவரது காரை பின்தொடர்ந்து பலரும் பைக்கில் சென்றனர். அப்போது நிகழ்ந்த விபத்தில் விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் கவலைக்கிடமான நிலையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அதிக அளவு ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

News March 4, 2026

விஜய்யின் இயக்குநர்கள் ஆதவ், அருண்ராஜ்: ஜெயக்குமார்

image

விஜய் நடிப்பில் கைத்தேர்ந்தவர் என்பதால் எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டை ஆக்‌ஷனுடன் மேடையில் பேசுகிறார் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அவரை ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் இயக்குநர்களாக இருந்து இயக்குவதாகவும் சாடியுள்ளார். விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசமுடியுமா என கேள்வி எழுப்பிய அவர், ஏதோ தனக்குத்தான் தில்லு, திராணி இருப்பதுபோல் வேடிக்கை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 4, 2026

ஒரே போட்டியால் 25 இடங்கள் முன்னேறிய சஞ்சு சாம்சன்!

image

தொடர் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, டி20 WC-ல் WI அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 97 ரன்கள் குவித்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்து சென்றார் சஞ்சு சாம்சன். இந்நிலையில் ICC டி20 தரவரிசையில் 25 இடங்கள் தாவி 40-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் சாம்சன். அதேநேரம், சூர்யகுமார் (7), திலக் வர்மா (6), இஷான் கிஷன் (4) மற்றும் அபிஷேக் சர்மா (1) ஆகிய இந்திய வீரர்கள் டாப் 10-ல் இடம்பெற்றுள்ளனர்.

error: Content is protected !!