News August 18, 2025
தூத்துக்குடிக்கு மேலும் ஒரு சிப்காட் பூங்கா

இன்று (18.8.2025) வெளியான அறிவிப்பில், சிங்கப்பூரின் ராயல் கோல்டன் ஈகிள் நிறுவனம் ரூ.4,953 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆதரவுடன் 1,967 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிப்காட்டிற்கு புதிய தொழில் பூங்கா, ரூ.667 கோடி முதலீட்டையும் 17,200 வேலைவாய்ப்புகளையும் கொண்டுவருகிறது. தென் தமிழ்நாட்டிற்கு மற்றும் ஒரு திருப்பு முனையாக அமையும் என கூறப்படுகிறது.
Similar News
News August 18, 2025
தூத்துக்குடியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக.21 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்” நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
BREAKING தூத்துக்குடியில் 17,200 பேருக்கு வேலை வாய்ப்பு

தூத்துக்குடியில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. அதன்படி அல்லிக்குளம், இராமசாமிபுரம், கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டபாறை, உமரிக்கோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் 1967 ஏக்கரில் ரூ.677 கோடியில் தொழிற்பூங்கா அமைய உள்ளது. இதனால் 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 3 மாதத்திகுள் இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 18, 2025
தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை பதிவு

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், இணையதளங்களில் பகிரப்படும் வேலை வாய்ப்பு லீக்குகள் ஆகியவற்றுக்கு பதில் அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலியான வேலை வாய்ப்பு செய்திகளில் நம்பிக்கை வைப்பதால் பண இழப்பு மற்றும் தனிப்பட்ட தகவல் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காவல்துறை எச்சரித்துள்ளது.