News August 18, 2025

LIC-ல் ₹88,000 சம்பளத்தில் வேலை.. 840 பணியிடங்கள்

image

LIC நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 21 – 32. சம்பளம்: ₹88,635 – ₹1,69,025. தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு (அக்.3), முதன்மைத் தேர்வு (நவ.8), நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.8. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

Similar News

News August 18, 2025

ஏர்டெல் ஆஃபர்.. இனி இசை மழையில் நனையலாம்!

image

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஆஃபர் கொடுத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். APPLE MUSIC சேவையை 6 மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏர்டெல் அறிவித்துள்ளது. MY AIRTEL APP-ல் சென்று வாடிக்கையாளர்கள் இதனை உறுதி செய்து கொள்ளலாம். 6 மாதத்திற்கு பிறகும் இந்த சேவையை தொடர விரும்பினால், மாதம் ₹119 கட்டணம் செலுத்த வேண்டும். இசை மழையில் நனைய தயாரா..!

News August 18, 2025

BREAKING: சிபிஐ மாநில செயலாளர் தேர்வு ஒத்திவைப்பு

image

சிபிஐ (CPI) மாநில செயலாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ-ன் 26-வது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று நகரின் முக்கிய வீதிகளில் செம்படை பேரணி நடைபெற்றது. முன்னதாக, முத்தரசனின் பதவிக் காலம் நிறைவடைவதால் மூ.வீரபாண்டியன், சந்தானம் இருவரில் யாரேனும் ஒருவர், புதிய மாநில செயலாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

News August 18, 2025

கவனமா இருங்க.. இப்படியும் ஏமாத்த ஆரம்பிச்சிட்டாங்க!

image

எந்தளவிற்கு தனிநபர் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு மோசடிகளும் அதிகரித்து கொண்டே போகின்றன. தற்போது வலைத்தளங்கள், மின்னஞ்சல்களின் மூலம் ‘Fake Captcha Scam’ ஒன்று பரவி வருகிறது. பயனர்கள் அதில், Tick செய்தால் போதும், கணினியில் உடனே Malware டவுன்லோட் ஆகி, மொத்த டேட்டாவையும் திருடி விடுகிறது. தெரியாத வலைத்தளங்களில் Browsing செய்யும் போது, பயனர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!