News August 18, 2025
இனி 10 நிமிடத்தில் ஆன்லைனில் நிலம் வாங்கலாம்

மளிகை பொருட்களை போல இனி நிலத்தையும் 10 நிமிடங்களில் வாங்கலாம். ZEPTO நிறுவனம், ரியல் எஸ்டேட்டிலும் கால் பதித்துள்ளது. அதாவது, தனியார் லேண்ட் டெவலப்பர் நிறுவனத்தோடு இணைந்து இந்த வசதியை தொடங்கவுள்ளது Zepto. ஏற்கெனவே 10 நிமிட மளிகை டெலிவரிக்கு எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு என்ன மாதிரியான வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். உங்கள் கருத்து?
Similar News
News August 18, 2025
நடிகர் கோட்டா சீனிவாச ராவின் மனைவி ருக்மிணி காலமானார்

பிரபல தமிழ் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கடந்த மாதம் மறைந்த நிலையில், இன்று(ஆக.18) அவரது மனைவி ருக்மிணி காலமானார். கணவரின் மறைவுக்கு பிறகு மன உளைச்சலால் உடல்நலக்குறைவுக்கு ஆளான அவர் ஹைதராபாத்தில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2010-ல் சாலை விபத்தில் இவர்களது மகன் கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத் பலியானது குறிப்பிடத்தக்கது.
News August 18, 2025
ஆகஸ்ட் 22: தியேட்டர், ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்..

ஆகஸ்ட் 22ம் தேதி தமிழில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிறது. ஒன்று வசந்த் ரவி நடித்துள்ள ‘இந்திரா’, மற்றொரு படம் ‘ சொட்ட சொட்ட நனையுது’. ஓடிடியிலும் சில படங்கள் வெளியாகிறது.
▶தலைவன் தலைவி (தமிழ்) – பிரைம்
▶மாரீசன் (தமிழ்) – நெட்ஃபிக்ஸ்
▶F1 தி மூவி (ஆங்கிலம்) – பிரைம் (வாடகை)
▶பீஸ் மேக்கர் – 2 (ஆங்கிலம்) – ஜியோ ஹாட்ஸ்டார்
News August 18, 2025
டிரம்ப் உடன் பேசியது என்ன? மோடிக்கு விளக்கிய புடின்

அலாஸ்காவில் USA அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்து ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் எடுத்துரைத்ததாக PM மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போருக்கு சுமுக தீர்வு காண இந்தியா தொடர்ந்து முயன்று வருவதாகவும், இருநாட்டு உறவுகள்(இந்தியா – ரஷ்யா) தொடர்பாக வரும் நாள்களில் வளர்ச்சிக்கான பரிமாற்றங்கள் நடைபெறும் என்றும் தனது X பக்கத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.