News August 18, 2025

ராணிப்பேட்டை காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று சமூக வலைத்தளத்தின் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் சாலை பாதுகாப்பு குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இதில் “பொறுப்புள்ள ஓட்டுநராக இருங்கள் வழிப்பாதையை மாற்றும்போது உங்கள் காட்டியைப் பயன்படுத்துங்கள். தெளிவாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்..! நமது சாலைகளை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவோம்.” என மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது.

Similar News

News August 18, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யா தேவி, நேர்முக உதவியாளர் ஏகாம்பரம், தனித் துணை ஆட்சியர் கீதாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

News August 18, 2025

ராணிப்பேட்டை: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

image

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 18, 2025

உங்களுடன் ஸ்டாலின் 2ம் கட்ட முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் 78 முகாம்கள் நாளை(ஆக.19) செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெறும். பொதுமக்கள், நகர்ப்புறத்தில் உள்ள 33 முகாம்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 45 முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!