News August 18, 2025
ஈரோடு: மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், வரும் ஆக.20ம் தேதி காலை, 11 மணிக்கு பெருந்துறை சேனடோரியம் கருமாண்டி செல்லிபாளையம் செயற்பொறியாளரின், பெருந்துறை கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதி மக்கள், குறைகளை கூறி நிவர்த்தி பெறலாம்.
Similar News
News March 5, 2026
ஈரோடு: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News March 5, 2026
கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட திமுக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, நம்பியூர் ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி என்.சி.சண்முகம், தனது ஆதரவாளர்களுடன் சென்று விருப்பமனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து நம்பியூரைச் சேர்ந்த மேலும் பல முக்கிய நிர்வாகிகளும் விருப்பமனு அளித்துள்ளதால், கோபி தொகுதியில் திமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
News March 5, 2026
ஈரோடு: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

ஈரோடு மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


