News August 18, 2025
மதுரையில் இலவச நீட் பயிற்சி

தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த விநாயகர் இன்ஸ்டிடியூட் மற்றும் ஸ்டார் நட்சத்திர அறக்கட்டளை இணைந்து மிஸ்ஸின் எம்பிபிஎஸ் என்னும் இலவச நீட் பயிற்சி வகுப்பின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மதுரையில் நீட் தேர்வில் படிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவ கனவை நிறைவேற்றுவதற்காக வரபட்ட திட்டம் இதன் மூலமாக வருடத்திற்கு 100 குழந்தைகளை டாக்டர் ஆக்குவேன் என ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி தெரிவித்தார்.
Similar News
News August 18, 2025
மதுரை: பெண்களுடன் டி.ஸ்.பி தள்ளு முள்ளு..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, உ.மாரிப்பட்டி கிராமத்தில் காவலர்களின் குடும்பத்தினர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கிய நிலையில் அதிகாரிகள் வராததால் வத்தலகுண்டு சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கலைந்து போக சொல்லி டிஸ்பி சந்திரசேகரன் பெண்களிடம் தள்ளுமுள்ளு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
News August 18, 2025
மதுரை: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

மதுரை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் <
News August 18, 2025
மதுரை: கம்மியான விலையில் பைக், கார் வேண்டுமா.!

மதுரை நகர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆக.25 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. ஏலதாரர்கள் மதுவிலக்கு பிரிவில் வாகனங்களை பார்வையிட்டு முன் பணமாக டூவீலருக்கு ரூ.5000, 3 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை ஆக.18 முதல் 22 வரை செலுத்தி ரசீது பெறலாம். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு அதிகமாக ஏலம் கோரவேண்டும்.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.யாருக்காவது உதவும்.